அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளர் ரோமினிக்கு ராப் பாடகர் கண்டனம்
Florida
வெள்ளிக்கிழமை,
பெப்ரவரி 03,
12:30 PM IST
1
கருத்துக்கள்
புளோரிடா, பிப். 3-
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஒபாமா போட்டியிடுகிறார். குடியரசு கட்சிக்கான வேட்பாளர் தேர்வு நடைபெறுகிறது.
தற்போது மிட் ரோமினி முன்னிலையில் உள்ளார். இவர் புளோரிடாவில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து நடந்த வெற்றி விழா கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ராப் இசை பாடகர் க்னான் எழுதி பாடிய பாடலை பாடி உற்சாகப்படுத்தினார்.
வாவின் பிளாக் என்ற தலைப்பிலான அப்பாடல் கடந்த 2010-ம் ஆண்டில் உலகம் முழுவதும் ஹிட் ஆனது. இந்த பாடலை அவர் பாடியதற்கு ராப் பாடகர் க்னான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எனது வாவின் பிளாக் என்ற பாடலை அதிபர் பராக் ஒபாமா பயன்படுத்தி கொள்ளலாம். அவருக்கு அதற்கான அனுமதியை நான் வழங்கி இருக்கிறேன். அதே நேரத்தில் மிட் ரோமினி தனது பிரசார கூட்டங்களில் இப்பாடலை பாட கூடாது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மிட் ரோமினியின் செய்தி தொடர்பாளர் ரிக்கோர்கா கருத்து தெரிவித்துள்ளார். இப்பாடலை பிரசாரத்தின்போது பயன்படுத்தி வந்தோம். அதற்கு க்னான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனவே, இனி அப்பாடலை பயன்படுத்த மாட்டோம் என்றார்.
பாடகர் க்னான் சோமாலியாவில் பிறந்தவர். தற்போது கனடாவில் தங்கி ராப் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
1
கருத்துக்கள்