சங்கரராமன் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த ரவுடி கைது
Chennai
வெள்ளிக்கிழமை,
பெப்ரவரி 03,
11:32 AM IST
0
கருத்துக்கள்
சென்னை, பிப். 3-
சென்னையில் தலைமறைவாக இருக்கும் ரவுடிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போலீசார் தலைமறைவு ரவுடிகளை வேட்டையாடி கைது செய்து வருகிறார்கள்.
மேற்கு மண்டலத்தில் இணை கமிஷனர் சங்கர் மேற்பார்வையில் ரவுடிகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனியில் வசித்து வந்த பழைய குற்றவாளியான மெக்கானிக் சேகர். கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்து வந்தான்.
கடந்த 2004-ம் ஆண்டு நடந்த சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மெக்கானிக் சேகர், வழக்கு விசாரணைக்கு சரியாக ஆஜராகாமல் இருந்து வந்தான். இவனை தேடிப்பிடித்து கைது செய்ய போலீசுக்கு உத்தரவிடப்பட்டது.
துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் விஜயராகவன் ஆகியோரது தலைமையில் பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் மாசானம் மெக்கானிக் சேகரை தேடி வந்தார்.
கொளத்தூர் வினாயகபுரம் திருமால் நகரில் சூரப்பட்டு மெயின் ரோட்டில் அவன் வசித்து வருவது தெரிய வந்தது. போலீசார் அவனை கைது செய்தனர். வேறு ஏதேனும் வழக்குகளில் மெக்கானிக் சேகருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
0
கருத்துக்கள்