மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி: சென்னை மாணவர் ராகுலுக்கு 5 தங்கம்
Chennai
வெள்ளிக்கிழமை,
பெப்ரவரி 03,
9:05 AM IST
0
கருத்துக்கள்
சென்னை, பிப்.3-
தமிழ்நாடு பள்ளி கல்வி துறை மற்றும் எஸ்.டி.ஏ.டி. சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்தில் நடந்தது. 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஆர்டிஸ்டிக் பிரிவில் பந்தயங்கள் நடைபெற்றன.
17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் சென்னை அடையாறு செயின்ட் பேட்ரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர் பி.ராகுல் 5 தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கம் வென்றார். அதோடு அவர் தனிநபர் சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றார்.
0
கருத்துக்கள்