அமெரிக்க நீச்சல் போட்டி: தமிழக வீரர் அக்னீஷ்வர் 2 தங்கம் வென்றார்
Chennai
வெள்ளிக்கிழமை,
பெப்ரவரி 03,
8:55 AM IST
0
கருத்துக்கள்
சென்னை, பிப்.3-
தமிழகத்தை சேர்ந்த முன்னணி நீச்சல் வீரரான ஜெ.அக்னீஷ்வர் கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் தங்கி தீவிர பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் வட கலிபோர்னியாவில் நடந்த 38-வது சன்பெல்ட் மாஸ்டர்ஸ் சாம்பியன் நீச்சல் போட்டி நடந்தது.
இதில் பல நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் அக்னீஷ்வர் 100 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் மற்றும் 400 மீட்டர் மெட்லே ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்றார். கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த போட்டியிலும் அக்னீஷ்வர் 100 மற்றும் 200 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். தொடர்ந்து சர்வதேச போட்டியில் இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்ற
அக்னீஷ்வர் கூறுகையில், `எனக்கு தலைசிறந்த வீரருக்கான முதல்-அமைச்சர் விளையாட்டு விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இது நான் தொடர்ந்து நீச்சலில் சாதிக்க ஊக்கம் அளிக்கும்.' என்றார்.
0
கருத்துக்கள்