கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் வளர்ச்சி திட்டங்களை உடனே செயல்படுத்தவேண்டும்: தமிழக காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள்
Chennai
வெள்ளிக்கிழமை,
பெப்ரவரி 03,
5:51 AM IST
0
கருத்துக்கள்
சென்னை, பிப்.3-
தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களை வழிநடத்திச் செல்பவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற எண்ணத்தை விட ஒரு தீவிரவாதப் போக்கைக் கடைப்பிடித்து இந்திய இறையாண்மைக்கு எதிராக, வன்முறையைத் தூண்டி வருகிற போக்கில் குறிப்பாக காங்கிரசை மையப்படுத்திப் பேசி வருவதை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.
இந்து முன்னணியினருக்கும், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்ற மோதலுக்கு காங்கிரஸ் கட்சி எந்த வகையிலும் துணை போகவில்லை.
வன்முறையை ஆதரிக்கவும் இல்லை. கைதானவர்கள் அனைவரும் இந்து முன்னணியினர். ஆனால் தேவையில்லாமல் அந்த அமைப்பு தலைவர் காங்கிரஸ் கட்சியை கொச்சைப்படுத்தி பேசி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ளப் பகுதியிலுள்ள மக்களின் வளர்ச்சித் திட்டங்களை மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த வகையிலும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது.
இவ்வாறு ஞானதேசிகன் எம்.பி. கூறியுள்ளார்.
0
கருத்துக்கள்