Recommendations
Recent Activity
பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும்: நரேந்திர மோடி கோரிக்க‌ை
மாண்‌ட்வி(குஜராத்),பிப்.3-
 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவான ‌தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
 
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது விசாரணை நடத்துவது குறித்து சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்யப்படும் என சுப்ரீம் ‌‌கோர்ட் தீர்ப்பு வழங்கிய பின்னரும் சிதம்பரத்தை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது என்றும் ‌மோடி தெரிவித்தார்.