Recommendations
Recent Activity
விழுப்புரத்தில் துணிகரம்: ஆசிரியையிடம் கத்தியை காட்டி ரூ.1 லட்சம் நகை கொள்ளை
விழுப்புரம், பிப். 2-
 
விழுப்புரம் கீழ்பெரும் பாக்கம் கலைவாணி தெருவை சேர்ந்தவர் வினோத் அந்தோணி(வயது 32). இவர் விழுப்புரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அமலா சிறிய புஷ்பம்(28). இவர் விழுப்புரம் - புதுவை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.  
 
நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அமலா சிறிய புஷ்பம் கீழ்பெரும்பாக்கம் கல்லூரி சாலையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே வந்த போது 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் அமலா சிறிய புஷ்பத்தை வழிமறித்தார். பின்னர் கத்தியை காட்டி அமலா சிறிய புஷ்பம் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு அங்கு மற்றொருவர் தயாராக நின்ற கொண்டிருந் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.
 
இதுகுறித்து அமலா சிறிய புஷ்பம் விழுப்புரம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குப்பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார். எந்நேரமும் மக்கள் நடமாட்டமுள்ள இந்த பகுதியில் கத்திமுனையில் ஆசிரியையிடம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.