Recommendations
Recent Activity
தூத்துக்குடி துறைமுகத்தில் சி.பி.ஐ. திடீர் சோதனை
தூத்துக்குடி, பிப்.2-
 
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சமீபத்தில் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் கடந்தஆண்டு மார்ச் மாதத்தில் தூத்துக்குடி துறைமுகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
 
அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி துறைமுகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று(1-ந்தேதி) மீண்டும் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது, என்.ஐ.ஐ.டி. நிறுவனத்தை சேர்ந்த ஒரு குழுவினரும் வந்திருந்தனர். அவர்கள் துறைமுகத்தில் ஆழப்படுத்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்தனர். எவ்வளவு ஆழம் தோண்டப்பட்டுள்ளது? எவ்வளவு பகுதிக்கு தூர்வாறும் பணி நடந்துள்ளது? என்பன போன்ற தொழில்நுட்ப விவரங்கள் குறித்து அவர்கள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.