Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
அணுமின் நிலையம் பணி இடிந்தகரை வாலிபர் போராட்ட குழு தாக்குதல், அணுமின்நிலையம், அத்தியூத்து சாலை கிணறு விபத்து அரசு, அதிகாரி பேச்சுவார்த்தை கூடங்குளம் போராட்டக்குழு, அம்பை கடன் பெண் பணம் மோசடி ஆலங்குளம் பெண் கைது, அரசுடன் பேச்சுவார்த்தை நீதிபதி ஏ.பி.ஷா நால்வர் குழு கூடங்குளம் போராட்டக்குழு அறிவிப்பு, ஆலங்குளம், ஆலங்குளம் குளம் குத்தகை தொடர் மோதல் அரிவாள் வெட்டு, ஆலங்குளம் டெங்கு காய்ச்சல் அம்மன் பொங்கல் வழிபாடு, ஆலங்குளம் மினி பஸ் மோதி கல்குவாரி தொழிலாளி சாவு, இடிந்தகரை அணு உலை போராட்டம் வெற்றி சீமான், இடிந்தகரை பொதுமக்கள் ஊர்வலம் உதயகுமார், இருவர், சங்கரன்கோவில், நெல்லை
மேலப்பாளையத்தில் காருக்கு தீ வைத்த கும்பல்
நெல்லை, பிப். 2-
 
மேலப்பாளையம் மேத்த மார்பாளையம் 2-வது தெருவை சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் பழைய, புதிய கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஒரு பழைய கார் வாங்கினாராம். அந்த காரை தனது வீட்டு அருகே நிறுத்தியிருந்தார். இன்று அதிகாலை அந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது.
 
காரின் பின்பக்க டயர் மற்றும் பகுதிகள் எரிந்து சேதமாயின. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் திரண்டு தீயை அணைத்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
 
காருக்கு மர்ம கும்பல் தீ வைத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் மேலப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.