Logo
சென்னை 24-04-2014 (வியாழக்கிழமை)
தொழில் அதிபரிடம் ரூ.7 லட்சம் கொள்ளை: காரில் ஆயில் கொட்டுவதாக கூறி நூதனமுறையில் வாலிபர்கள் கைவரிசை
நாகர்கோவில்,பிப்.2-

மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முகமது அப்துல்காதர் (வயது61),தொழில் அதிபர். பி.எஸ்.என். எல். சிம்கார்டு, ரீசார்ஜ் கூப்பன்களை விற் பனை செய்யும் முகவராகவும் உள்ளார். இவர் நேற்று மாலை நாகர்கோவில் மணிமேடை ரோட்டில் எஸ்.பி. அலுவலகம் அருகே உள்ள தனியார் வங்கிக்கு காரில் சென்றார். வங்கியில் ரூ.7 லட்சம் பணத்தை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டு காருக்கு வந்தார்.

முன்இருக்கையில் பணப்பையை வைத்து விட்டு காரில் ஏற முயன்றபோது ஒரு வாலிபர் வந்து காரின் பின்னால் ஆயில் கொட்டுவதாக கூறினார். உடனே முகமதுஅப்துல்காதர் பின்னால் சென்று பார்த்தபோது அந்த வாலிபர் காரில் இருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு அங்கு மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற வாலிபருடன் தப்பி விட்டார்.

இதுகுறித்து முகமது அப்துல் காதர் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவம் பற்றி அறிந்த தும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பிரவேஷ்குமார், டி.எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை குறித்து தொழில் அதிபர் அப்துல் காதர் கூறியதாவது:-

நான் பாங்கியில் எடுத்த ரூ.7 லட்சம் பணத்தை காரின் முன் இருக்கையில் வைத்து விட்டு உள்ளே ஏற முயன்றேன். ஒரு வாலிபர், காரில் இருந்து ஆயில் கொட்டுவதாக கூறினார். நான் இறங்கி பார்த்தேன். காரின் அடியில் ஆயில் கொட்டிக்கிடந்தது. ஒர்க்ஷாப் செல்லலாம் என முடிவு செய்து காரில் ஏறினேன். அப்போது முன் இருக்கையில் இருந்த ரூ.7 லட்சம் பணம் காணாமல் போய் இருந்தது.

காரில் ஆயில் கொட்டுவதாக கூறிய வாலிபர், எனது பணப்பையுடன் மற்றொரு வாலிபரின் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றார். அதன்பின்பு தான் என்னை ஏமாற்றி அந்த வாலிபர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதை உணர்ந்தேன். அந்த வாலிபர்களே எனது காரின் அடியில் ஆயிலை ஊற்றியிருந்ததும் எனக்கு தெரிந்தது. அந்த வாலிபர்களை கண்டுபிடித்து எனது பணம் கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கிறிஸ்துநகரை சேர்ந்த ஜேக்கப்ஜான்சன் என்பவர் வங்கியில் ரூ.1 1/2 லட்சம் பணத்தை எடுத்து மோட்டார் சைக்கிள் பாக்சில் வைத்து விட்டு டீ குடிக்க சென்ற போது மர்மநபர்கள் திருடி சென்றனர். அடுத்த டுத்து நடந்த இச்சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கியில் பணம் எடுப்பவர்களை நோட்ட மிட்டு கொள்ளையடிக்கும் கும்பல் நாகர்கோவிலில் ஊடுருவியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ் குமார் உத்தரவின் பேரில் நேற்று இரவு நாகர் கோவிலில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கியிருக்கி றார்களா? என போலீசார் சோதனை நடத்தினர். எனினும் யாரும் சிக்கவில்லை. முகமதுஅப்துல்காதரிடம் பணத்தை கொள்ளையடித்தவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. வங்கியில் பணம் எடுப்பவர்களை நோட்டமிட்டு அவர்களின் கவனத்தை திசைதிருப்பி பணத்தை அபேஸ் செய்வதில் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த கொள்ளையர்கள் கைதேர்ந் தவர்கள் ஆவர்.

நாகர்கோவிலில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் இன்ஸ்பெக்டர் பிரவின் குமார் தலைமையிலான ஒரு தனிப்படையினர் திருச்சி சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முகமதுஅப்துல் காதரிடம் பணத்தை அபேஸ் செய்த வாலிபரின் படத்தை வரையவும், அதை வைத்து கொள்ளையர்களை விரைந்து பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

O
P
E
N

close

அண்மை - கன்னியாகுமரி

section1

பணம் பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில், ஏப்.24–பாரதீய ஜனதா மாநில தலைவரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவில் மகளிர் ....»