காதல், காமெடி கதையம்சத்துடன் உருவாகும் படம் ‘மனம் கொத்திப் பறவை’. இதில் நாயகனாக சிவகார்த்திகேயன், நாயகியாக ஆதித்யா நடிக்கின்றனர். இளவரசு, சூரி, ரவிமரியா, கிஷோர், நரேன், வெண்ணிறஆடை மூர்த்தி, சிங்கம்புலி, வனிதா, ஸ்ரீநாத், சாம்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ். எழில் இயக்குகிறார். காரைக்கால் பகுதியில் ‘அய்யய்யோ வாடிபுள்ள ஆளில்லை வீட்டுக்குள்ளே என்ற பாடல் காட்சி சிவகார்த்திகேயன், ஆதித்யா நடிக்க படமானது. படப்பிடிப்பில் ஊர் மக்கள் திரண்டு பாடலுக்கு கொடுத்த வரவேற்பு அலாதியானது என்றும், அப்பாடல் ஹிட்டான உந்துதலில் கடுமையாக உழைத்து காட்சியை எடுத்தோம் என்றும் இயக்குனர் கூறினார்.
இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எழில், எஸ்.அம்பேத்குமார், ஏ.ரஞ்சீவ்மேனன் இணைந்து தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவு: சூரஜ் நல்லுசாமி, இசை: டி. இமான்.