Recommendations
Recent Activity
ரூ.10,500 கட்டினால் ரூ.54 ஆயிரம் கிடைக்கும்: திருவள்ளூரில் ரூ.20 லட்சம் மோசடி; கணவன், மனைவி, மாமியார் கைது
திருவள்ளூர், பிப்.2-

திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் செல்வி (23). சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் (31). இவரது கணவர் வினோத்குமார் (41). எஸ்தரின் தாய் குளோரி (48) ஆகியோர் செல்வியிடம் தாங்கள் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த பாஸ்டர் அந்தோணியின் நிதி நிறுவனத்தில் முகவர்களாக உள்ளதாகவும், இந்த நிதி நிறுவனத்தில் ஒருமுறை ரூ.10,500 பணம் கட்டினால் முதல் 2 மாதம் ரூ.2,700 தருவதாகவும், பின்னர் 9 மாதங்கள் இரட்டிப்பாக மாதம் ரூ.5,400 தருவதாகவும் (மொத்தம் 54 ஆயிரம்) கூறி செல்வியிடம் ரூ.10,500 பணம் பெற்றுள்ளனர். மேலும் இதேபோல் வேப்பம்பட்டு மற்றும் அந்த பகுதியில் உள்ள 58 பேரிடம் ரூ.19.45 லட்சம் வசூலித்து உள்ளனர். பின்னர் ஒரு சிலருக்கு மட்டும் 2 மாதம் ரூ.2,700 கொடுத்துள்ளனர்.

பலருக்கு பணம் தரவில்லை. இதுகுறித்து பணம் செலுத்திய வர்கள் கேட்டபோது 3 பேரும் முறையாக பதில் சொல் லாமல் காலம் கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் செல்வி அவர் களிடம் மாதம் ரூ.2,700 பணம் தராதது குறித்து கேட்டுள்ளார். இதில் அவர் களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து பணம் கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி யுள்ளனர்.

இதுகுறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் செவ்வாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார், அவரது மனைவி எஸ்தர், மாமியார் குளோரி ஆகி யோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவான பாஸ்டர் அந்தோணியை தேடிவருகின்றனர்.