ஆம்பூரில் மாயமான பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார்: போலீஸ் இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் சிறை பிடிப்பு
Vellore
வியாழக்கிழமை,
பெப்ரவரி 02,
1:10 PM IST
1
கருத்துக்கள்
ஆம்பூர், பிப்.2-
ஆம்பூரை அடுத்த சின்னமலையாம்பட்டை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் ராதாகிருஷ்ணன் வேன் டிரைவர். இவரது மனைவி துர்கா (வயது24), இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 29ந் தேதி துர்கா தனது குழந்தைகளை தாய் வீட்டில் விட்டு விட்டு திடீரென மாயமானார். எனவே அவரை அக்கம் பக்கத்து உறவினர் வீடுகளிலும் தேடினர். ஆனால் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான கிணற்றில் துர்கா பிணமாக மிதப்பது நேற்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி தகவலை அறிந்ததும் உமராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரன் சென்று விசாரணை நடத்தினார். அங்கு துர்காவின் உறவினர்கள், பொதுமக்கள் திரண்டனர்.
துர்காவை யாரோ கொலை செய்து உடலை கிணற்றில் வீசி உள்ளனர். கொலையாளிகளை உடனே கைது செய்யவேண்டும். வேலூர் கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் இங்கு வரவேண்டும் என்று கூறி போலீஸ் இன்ஸ்பெக்டரை அவர்கள் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர் டி.எஸ்.பி. விஜயகுமார் இன்ஸ்பெக்டரை சிறை பிடித்து போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். துர்காவின் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. ஆஸ்பத்திரி முன்பு துர்காவின் உறவினர்கள் திரண்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
1
கருத்துக்கள்