வேலூர், பிப்.2-
வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் 'ரிவேரா 2012' கலை விழா இன்று தொடங்கியது. 4 நாட்கள் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில், இந்தியா முழுவதிலும் இருந்தும் 370 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்து 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 8 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். 82 விதமான போட்டிகள், 22 வகையான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.
இன்று காலை சுகாதார விழிப்புணர்வை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மராத்தான் ஓட்டம் நடந்தது. விருதம்பட்டில் தொடங்கி வி.ஐ.டி. வரை நடந்தது. இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
மராத்தன் போட்டியை வி.ஐ.டி.துணை தலைவர் சங்கர் விசுவநாதன், ஜி.வி.சம்பத் தொடங்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து ரிவேரா 2012 விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங்பதானி, தேசிய டென்னிஸ் பயிற்சியாளர் நந்தன்பால் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் விழாவுக்கு தலைமை தாங்கினார். தொடர்ந்து ஷீப்பரி மாண பயிற்சி பட்டரை நடந்தது. இதில் கின்னஸ் சாதனை படைத்த ட்ரேசி லீஸ்டம் என்பவர் கலந்து கொண்டு முப்பரிமான ஓவியம் வரைந்தார். மேலும் மாணவ, மாணவிகளுக்கும் கற்று கொடுத்தார்.
மாலை 6 மணிக்கு பின்னணி பாடகர்கள் ஆலப்ராகுல், ராகுல் நம்பியார், சுசித்ரா, ஷ்ரேயா கோஷல் ஆகியோர் கலந்து கொள்ளும் இன்னிசை நிகழ்ச்சியும் தொடர்ந்து வாணவேடிக்கையும் நடக்கிறது.