Recommendations
Recent Activity
மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மண்டல உற்சவம்: 8-ந்தேதி தொடக்கம்
மதுரை, பிப். 2-
மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மண்டல உற்சவம் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெப்பத்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதை தொடர்ந்து தினசரி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.
 
இந்நிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாசி மண்டல உற்சவம் வருகிற 8-ந்தேதி தொடங்கி மார்ச் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது.   இதையொட்டி 27-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும். முன்னதாக வருகிற 8-ந்தேதி அன்று வாஸ்து சாந்தி உற்சவமும், 9-ந்தேதி காலை 10.35 மணிக்கு கொடி ஏற்றமும், அன்று இரவு முதல் விநாயகர் திருநாள் தொடங்கி 17-ந்தேதி வரை விழா நடைபெறும்.
 
அன்றிரவு மாசி மண்டல உற்சவம் கொடி இறக்கி கணக்கு வாசித்தல் நடைபெறும் மேலும் பிப்ரவரி 9-ந் தேதி கொடியேற்றமும், அன்று இரவு முதல் விநாயகர், சுப்பிரமணியர், முதல் மூவர், சந்திரசேகர் உற்சவம் முடிந்து பிப்ரவரி 27-ந்தேதி காலை இரவு வேளைகளில் பஞ்சமூர்த்தி 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்து திருக்கோவில் வந்து சேரும்.
 
 எனவே பிப்ரவரி 9-ந் தேதி முதல் மார்ச் 17-ந் தேதி வரை கோவில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ அம்மனுக்கு ரைவக்கிரீடம், தங்கக்கவசம் சாத்துப்படி, உபய திருக்கல்யாணம், தங்கரதம் புறப்பாடு ஆகிய நேர்ச்சைகளுக்காக பதிவு செய்து நடத்த முடியாது என கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.