Recommendations
Recent Activity
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் என்.கே.கே.பி ராஜா வீட்டில் 60 ஆவணங்கள் சிக்கின
ஈரோடு, பிப். 2-
 
தி.மு.க. ஆட்சியில் கைத்தறி துறை அமைச்சராக இருந்தவர் என்.கே.கேபி. ராஜா. இப்போது ஈரோடு மாவட்ட தி.மு.க. செய லாளராக உள்ளார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக செர்து சேர்த்ததாக புகார்கள் கூறப்பட்டன.  
 
இதையொட்டி லஞ்ச ஓழிப்பு போலீசார் நேற்று ஈரோடு மாவட்டத்தில் ராஜா, அவரது தந்தை பெரியசாமி வீடுகள்- கல்வி நிறுவனங்கள் உள்பட 8 இடங்களிலும், மற்றும் சென்னை, கரூர் ஆகிய இடங்களிலும் மொத்தம் 10 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
 
கவுந்தப்பாடி மற்றும் ஈரோடு செல்வம் நகரில் உள்ள என்.கே.கே. பி .ராஜா வீடு, ஆப்பக்கூடலில் உள்ள முன்னாள் அமைச்சரும், என்கே.கே.பி. ராஜாவின் தந்தையுமான என்.கே.கே. பெரியசாமி வீடு, இவர் நடத்தி வரும் கல்லூரி, இதன் செயலாளர் முருகனின் வீடு மற்றும் என்.கே.கே.பி. ராஜாவின் நண்பர்கள் சரவணன், மூர்த்தி ஆகியோரின் வீடு போன்ற 8 இடங்களில் இந்த சோதனை நடந்தது.
 
ஈரோடு, விருதுநகர், சென்னை, சேலம், உள்பட பல்வேறு இடங்களில் இருந்து 10 லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.கள் 10 குழுக்களாக சென்று ஒரே நேரத்தில் இந்த சோதனையை மேற்கொண்டனர்.  
 
காலை 6.30 மணிக்கு நடந்த இந்த சோதனை மாலை 6.30 மணி வரை 12 மணி நேரம் நீடித்தது. இந்த சோதனையின் போது என்.கே.கே.பி. ராஜா மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் 2006-ம் ஆண்டுக்கு பின்பு வாங்கப்பட்ட சொத்துக்கள் விபரம், தொடங்கப்பட்ட தொழில்கள், வங்கி கணக்குகளில் நடந்த பண பரிமாற்றம் மற்றும் விற்பனை பத்திரங்கள் போன்ற விபரங்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
 
இது தொடர்பான 60-க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒப்பு போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.  
 
இந்த சோதனை பற்றி முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா கூறும்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் எங்களிடம் இருந்து எந்த ஆவணமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இது தொடர்பாக போலீசார் எந்த வழக்கு போட்டாலும் அதை சட்டரீதியாக சந்திப்போம் என்று கூறினார்.