Recommendations
Recent Activity
வளசரவாக்கத்தில் போலீஸ் அதிகாரி மனைவியிடம் 20 பவுன் நகை பறிப்பு
பூந்தமல்லி, பிப். 2-

வளசரவாக்கம் காம கோடி நகர் வேலவன் 2-வது தெருவை சேர்ந்தவர் அழகு சோலைமலை. ஓய்வு பெற்ற உதவி போலீஸ் கமிஷனர். இவரது மனைவி சரோஜா (66). சரோஜா தினமும் வீட்டு முன்பு கேட்டில் போடப்பட்டு இருக்கும் பால் பாக்கெட்டை எடுப்பதற்காக அதிகாலை 5.30 மணியளவில் வெளியே வருவார்.

சரோஜா தினமும் வெளியே வருவதையும் அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியையும் மர்ம நபர்கள் நோட்டம் விட்டுள்ளார்கள். வழக்கம்போல் இன்று அதிகாலையில் சரோஜா வெளியே வந்தபோது அங்கு மறைந்து இருந்த 2 வாலிபர்கள் அவர் மீது பாய்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தில் கிடந்த 20 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அவர் திருடன் திருடன் என்று கத்தினார்.

அதிகாலை நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் இல்லை. எனவே யாரும் உதவிக்கு வரவில்லை. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். இதுபற்றி வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்கள்.