திருப்பூர் தியேட்டரில் நடிகர் விஜயிடம் கை குலுக்க சென்று நெரிசலில் சிக்கிய பெண் போலீஸ் || Actor Vijay to Tiruppur his hand shaking Being a female police
Logo
சென்னை 19-04-2015 (ஞாயிற்றுக்கிழமை)
  • டெல்லி ராம்லீலா மைதானத்தில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிரான பேரணியில் கலந்து கொள்ள ராகுல் வந்தார்
  • நாட்டின் தலைமை தேர்தல் ஆணையராக இன்று பதவியேற்கிறார் சைதி
  • ஊத்தங்கரை அருகே கார் மரத்தில் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
  • ஏழைகளுக்காக வீடு கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளோம் - அம்பானிக்கு அல்ல: மோடி பேச்சு
  • ஏமனில் சிக்கிய மக்களை வெளியேற்றிய சுஷ்மா - வி.கே.சிங்கை பாராட்டுகிறேன்: பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பேச்சு
திருப்பூர் தியேட்டரில் நடிகர் விஜயிடம் கை குலுக்க சென்று நெரிசலில் சிக்கிய பெண் போலீஸ்
திருப்பூர் தியேட்டரில் நடிகர் விஜயிடம் கை குலுக்க சென்று 
நெரிசலில் சிக்கிய பெண் போலீஸ்
திருப்பூர், பிப்.2-
திருப்பூரில் உள்ள உஷா தியேட்டருக்கு நடிகர் விஜய் வந்தார்.அவர் வெளியே நின்று இருந்த ரசிகர்களை பார்த்து கை காட்டினார்.அப்போது ரசிகர்கள் அவரை பார்த்து உற்சாகமாக கத்தினார்கள். தியேட்டருக்கு உள்ளே சென்ற நடிகர் விஜய் நிகழ்ச்சியில் பேசினார்.
 
அப்போது அங்கு பாதுகாப்புக்காக வந்து இருந்த பெண் போலீஸ் ஒருவர் நடிகர் விஜயை பார்த்ததும் மிகவும் சந்தோசமடைந்தார்.அவர் தான் போலீஸ் பணியில் இருப்பதை மறந்து விட்டு தனது செல்போன் கேமராவால் நடிகர் விஜயை பல கோணங்களில் படம் எடுத்தார்.
 
மேலும் தனது டைரியை மேடையில் இருந்த உஷா தியேட்டர் உரிமையாளர் ரவிக்குமாரிடம் கொடுத்து அதில் விஜயிடம் ஆட்டோகிராப் வாங்கித்தர கேட்டார்.நடிகர் விஜயும் அந்த பெண் போலீஸ்காரருக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார். ஆனாலும் நடிகர் விஜயிடம் அந்த பெண் போலீசுக்கு கை குலுக்க ஆசை ஏற்பட்டது.
 
இதையடுத்து அவர் மேடையில் ஏறி விஜயிடம் கை குலுக்க நெருங்கினார்.ஆனால் அதற்குள்ளாகவே கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அவரால் நடிகர் விஜயை நெருங்க முடியவில்லை.ஆனாலும் கூட்டத்தை முண்டியடித்து கொண்டு உள்ளே சென்றார்.கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக அவரால் நடிகர் விஜயிடம் கை குலுக்க முடியவில்லை.
 
இருந்தாலும் அந்த பெண் போலீஸ் நடிகர் விஜயின் அருகில் சென்று நின்று கொண்டு அருகில் இருந்த போட்டோகிராபர்களிடம் சொல்லி பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.இதற்குள்ளாகவே நடிகர் விஜய் வெளியே கிளம்பினார்.
 
 அவரிடம் மீண்டும் நெருங்க முயன்ற அந்த பெண் போலீஸ் கூட்ட நெரிசலில் சிக்கினார்.விஜய் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தத்தளித்த அவரை அங்கிருந்த மற்ற போலீசார் மீட்டனர்.ஒரு வழியாக கூட்டத்தில் இருந்து மீண்ட அவர் விஜய்க்கு அருகில் சென்ற மகிழ்ச்சியை சக போலீஸ்காரர்களிடம் சொல்லி சந்தோசப்பட்டார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

மத்திய பல்கலைக் கழக கட்டிட விபத்து: 3 என்ஜினீயர்கள் சஸ்பெண்டு

திருவாரூர், ஏப். 19–திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்திற்கு சொந்தமான குடியிருப்பு வளாகம் கட்டும் பணி நடைபெற்று ....»