Recommendations
Recent Activity
எகிப்து நாட்டில் நடந்த கால்பந்து போட்டியில் கலவரம்:73 பேர் பலி
கெய்ரோ,பிப்.2-
 
எகி்ப்து நாட்டில் கால்பந்து போட்டியின் போது நடைபெற்ற மோதலி்ல் சுமார் 73 பேர் பலியாயினர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
 
எகிப்து நாட்டில் உள்ள சிட்டி ஆப் போர்ட் நகரில் உள்ளூர் கால்பந்து அணிகளான அல் அலி மற்றும் அல் மாஸ்ரி ஆகிய அணிகள் மோத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டிய‌ை காண ஆவலுடன் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.
 
அப்போது, போட்டி துவங்குவதற்கு கால தாமதம் ஏற்பட்டதாகவும், அதனால் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் தங்களது அணிகளை ஆதரித்து ரகளையி்ல் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.
 
இதனால் ஏற்பட்ட திடீர் வன்முறை காரணமாக 73 பேர் பலியானார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ரசிகர்களிடையே உண்டான மோதல் எகி்ப்து கால்பந்து வரலாற்றில் ஒரு மோசமான விளைவு என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், இது ஒரு மிகப்பெரிய வரலாற்று கறை என சுகாதாரத்துறை ‌அமைச்சர் கருத்து தெரிவித்தார்.