டிஎன்பிஎஸ்சி குறை தீர்க்கும் மையம் தொடக்கம்
Chennai
புதன்கிழமை,
பெப்ரவரி 01,
6:11 PM IST
0
கருத்துக்கள்
சென்னை, பிப்.1-
தமிழ்நாடு தேர்வாணையத்தின் தலைவராக முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. ஆர். நடராஜ் சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட சில நாட்களிலேயே, தேர்வுக்காக விண்ணப்பிப்பவர்களின் குறைகளை கேட்பதற்கு தேர்வாணையத்தில் குறை தீர்க்கும் மையத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இதில் மைய அதிகாரி, துணை அதிகாரி மற்றும் ஒரு உதவியாளர் என்று மூன்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மையத்தில் விண்ணப்பதாரர்கள் தங்கள் குறைகளை நேரடியாகவோ, இ-மெயில் மூலமாகவோ, தபால் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ தெரிவிக்கலாம். இந்த மையம் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை செயல்படும்.
இந்த மையம் விண்ணப்பதாரர்கள் மேற்கொண்டுவரும் தேவையற்ற மனக்கவலைகளை தவிர்க்க உதவும் எனவும் தேர்வாணையத்தின் செயல்பாடுகளை வெளிப்படையாக பராமரிக்கவும் உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
0
கருத்துக்கள்