ஊட்டி ரோஜா கண்காட்சியில் மேலும் 500 புதிய வகை ரோஜா
Nilgiris
புதன்கிழமை,
பெப்ரவரி 01,
5:30 PM IST
0
கருத்துக்கள்
ஊட்டி, பிப். 1-
ஊட்டியில் அரசு ரோஜா பூங்கா உள்ளது. இங்கு அரிய வகை ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு வந்து ரோஜா பூக்களை ரசித்து செல்வது வழக்கம்.
ஊட்டி ரோஜா பூங்காவில் ஆண்டு தோறும் ரோஜா கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சி மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தற்போது கவாத்து பணி, உரம் போடும் பணி நடைபெறுகிறது. கண்காட்சியின் போது இந்த ஆண்டு புதிதாக 500 ரக ரோஜாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் பூங்கா ஒரு ஏக்கர் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இது குறித்து தோட்டக் கலைத்துறை இணை இயக்குனர் ஆல்துரை கூறியதாவது:-
ஊட்டி ரோஜா பூங்காவில் உலகத்தில் சிறந்த ரோஜா செடிகள் இருக்கிறது. தற்போது பூங்காவில் 3800 ரக ரோஜா செடிகள் உள்ளது. இந்த ஆண்டு மேலும் 500 வகை ரகங்கள் கொண்டு வரப்பட உள்ளது.
கடந்த ஆண்டு 6 1/2 லட்சம் சுற்றுலா பயணிகள் ரோஜா கண்காட்சியை பார்த்து ரசித்து சென்றுள்ளனர். இந்த ஆண்டு 7 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே முதல் வாரம் ரோஜா கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
0
கருத்துக்கள்