Recommendations
Recent Activity
தொண்டி அருகே வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு: புகைகூண்டு வழியாக புகுந்து கைவரிசை
திருவாடானை, பிப். 1-  
 
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது நம்புதாளை. இந்த பகுதியை சேர்ந்தவர் பூண்டி. இவரது மனைவி வசந்தி (வயது 26). கணவனும், மனைவியும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர்.
 
இதை அறிந்த மர்ம ஆசாமி இரவில் புகை கூண்டு வழியாக வீட்டுக்குள் புகுந்தான்.   பின்னர் அவன் பீரோவில் இருந்த 6 1/2 பவுன் தங்க நகைகள், 2 ஜோடி கொலுசுகளை திருடி சென்று விட்டான்.
 
வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பிய வசந்தி பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே இருந்த நகைகள் திருடப்பட்டு இருந்தது.
 
இதுகுறித்து வசந்தி தொண்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.