Recommendations
Recent Activity
மம்மி என்று கூறவேண்டாம்; குழந்தைகளுக்கு “அம்மா” என்று அழைக்க கற்று கொடுங்கள்- மதுரை ஆதீனம் பேச்சு
திருவாடானை, ஜன. 1-
திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் பனி ரெண்டரை கிராம வீரகோடி வெள்ளாளர் சமுதாய நலச் சங்க முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சங்கத் தலைவர் போஸ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுப்பு பொருளாளர் ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
இவ்விழாவில் மதுரை ஆதீனம் கலந்துகொண்டு பேசியதாவது:-. பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள் சிறப்பான இடத்தை அவர்கள் பிடிக்க வழிகாட்டுங்கள் இன்றைய உலகில் ஆங்கில அறிவு மிக அவசியமான ஒன்று அதே நேரத்தில் அம்மா, என்று அழைக்க கற்றுக்கொடுங்கள் மம்மி என்று கூறவேண்டாம். 
 
 தமிழ்மொழி மிகப்பழமையான மொழி ஜாதிகளை யாரும் ஒழித்துவிட முடியாது. ஜாதி அமைப்புக்களும் தேவையானதுதான். அதே நேரத்தில் ஒருவரை ஒருவர் மனம் புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ளகூடாது. வாழ்க்கையில் யார்யாருக்கு என்ன வேண்டுமோ அதை இறைவன் தருகிறார். இறைவன் அனைவரையும் காத்து வருகிறார். மனம் பக்குவப்படவேண்டும்.
 
வாழ்க்கையில் கஷ்டப்படும் போது சோதனையை சந்திக்கிறோம். அப்போதுதான் நம் மனம் பக்குவப்படுகிறது. எப்படி தங்கத்தை வெட்டி எடுத்து புடம் போட்டு பட்டை தீட்டி கடைசியாக அணிகிறோம். அது போன்றுதான் மனிதமனமும். எனவே, மனதை பக்குவப்படுத்த வேண்டிய வழிகளை ஆண்மீக மார்க்கத்தில் செலுத்தி வாழ பழக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
 
இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் தென்னவன் சங்க செயலாளர் அரவரசன், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் பாக்கிய நாதன், தேவகோட்டை வட்டார வ.உ.சி பேரவை தலைவர் குமாரவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
முன்னதாக திருவாடானையில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் திருவெற்றியூர் ஏ.ஆர்.மங்கலத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். வீரகோடி வெள்ளாளர் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.