சென்னை, பிப். 1-
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ. சக்தி பேசும் போது, கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் போது என்று பேசத் தொடங்கினார்.
உடனே தி.மு.க.வினர் எழுந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அமைச்சர் செங்கோட்டையன்: உறுப்பினர் மைனாரிட்டி தி.மு.க. அரசு என்று சொல்லியதில் எந்த தவறும் இல்லை. அந்த ஆட்சி மைனாரிட்டி ஆட்சி என்பதை நாடே அறியும். (இதற்கு தி.மு.க.வினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது).
சபாநாயகர் ஜெயக்குமார்:- சிறுபான்மைக்கும் பெரும்பான்மைக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு தெரியும். சிறுபான்மை அரசாக இருந்ததால்தான் சபாநாயகர் மீதே நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம்.
மு.க.ஸ்டாலின்:- கேள்வி நேரத்தின்போது யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது என்பது மரபு. சபையில் சொல்லக்கூடாத வார்த்தை அல்ல என்று சபாநாயகர் அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறோம். அதை மதிக்கிறோம். மைனாரிட்டியாக இருந்தாலும் கருணாநிதி தலைமையில் 5 ஆண்டுகள் நடந்த ஆட்சி என்பது எங்களுக்கு பெருமை.
தி.மு.க.வினர் இதை பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து தி.மு.க.வினர் அமைதியானார்கள்.