Recommendations
Recent Activity
பி.டி.ஆர். கால்வாயில் மதகுகளை திறந்து தண்ணீர் திருடுபவர்கள் மீது நடவடிக்கை: அதிகாரி எச்சரிக்கை
தேனி, பிப். 1-
 
தேனி மாவட்டத்தில் உள்ள பி.டி.ஆர் கால் வாயில் உள்ள மதகுகளை திறந்து தண்ணீர் திருடுபவர்களை பிடிக்க விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு ஒரு கண்காணிப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
 
தேனி மாவட்டத்தில் உள்ள பி.டி.ஆர் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்படுகின்ற 13 வருவாய் கிராமங்களில் உள்ள 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த பி.டி.ஆர் கால்வாய் கடந்து வரும் பகுதிகளில் 8 மடைகள், வாய்க்கால்கள், சுத்தகங்கை ஓடை மூலம் 44 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.
 
இந்த கால்வாயில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால். பொதுமக்கள் பலர் மடைகளில் உள்ள ஷட்டர்களை திறந்து தண்ணீரை திருடி வீணாக்குகின்றனர்.   இதுபோன்ற தவறுகள் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கொண்ட ஒரு கண்காணிப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டு தற்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 
இவ்வாறு விவசாயத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரை திருடி வீணாக்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.