நாகர். வன ஊழியர் தம்பதி கொலையில் சென்னை கூலிப்படையினர் 2 பேர் சிக்கினர் || nagercoil forest employe murder case chennai two person arrest
Logo
சென்னை 30-11-2015 (திங்கட்கிழமை)
நாகர். வன ஊழியர் தம்பதி கொலையில் சென்னை கூலிப்படையினர் 2 பேர் சிக்கினர்
நாகர். வன  ஊழியர் தம்பதி கொலையில் சென்னை கூலிப்படையினர் 2 பேர் சிக்கினர்
நாகர்கோவில், ஜன.31-

நாகர்கோவிலை அடுத்த தேரூரை சேர்ந்தவர் ஆறுமுகம். வன ஊழியர். ஆறுமுகமும் அவரது மனைவி யோகீஸ்வரியும் கடந்த நவம்பர் மாதம் 10-ந் தேதி நாகர்கோவிலில் இருந்து தேரூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்மக்கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர். ஆனால் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. கொலைக்கான காரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையே வன ஊழியர் தம்பதி கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆறுமுகம்- யோகீஸ்வரியின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆறுமுகம்- யோகீஸ்வரி கொலை வழக்கு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

இதுதொடர் பாக சென்னை சென்ற ஒரு தனிப்படையினரிடம் கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப்படையை சேர்ந்த 2 பேர் சிக்கினர். அவர்கள் இருவரையும் போலீசார் நாகர்கோவிலுக்கு அழைத்து வருகிறார்கள். இங்கு கொண்டு வந்த பின்பு அவர்களை கொலை நடந்த இடத்துக்கு அழைத்து சென்று விசாரிப்பார்கள் என்று தெரிகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - கன்னியாகுமரி

section1

குளச்சலில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

குளச்சல், நவ. 30–குளச்சல் களிமார் பாலம் அருகே சாலை ஓரத்தில் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif