பெருமாள்புரம் அகதிகள் முகாமில் இருந்த 2 மாணவர்கள் உள்பட 3 பேர் மாயம் || Refugee Camp 3 persons missing including 2 students
Logo
சென்னை 13-02-2016 (சனிக்கிழமை)
  • சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவிலிருந்து வந்த பெண் பயணியிடம் 2 கிலோ தங்கம் பறிமுதல்
  • பீகார் மாநிலம் அருகே சாசாராமில் டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் பலி
பெருமாள்புரம் அகதிகள் முகாமில் இருந்த 2 மாணவர்கள் உள்பட 3 பேர் மாயம்
பெருமாள்புரம் அகதிகள் முகாமில் இருந்த 2 மாணவர்கள் உள்பட 3 பேர் மாயம்
கன்னியாகுமரி, ஜன. 31-
 
கன்னியாகுமரி அருகே பெருமாள்புரத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.  அங்கு வசித்து வரும் வெற்றிவேல் மகன் பிரதீபன், கொட்டாரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். ஞானசகாயம் மகன் லூர்துவினிசன் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 28-ந் தேதி மாலை வீட்டில் இருந்து பிரதீபன், லூர்துவினிசன் இவரது நண்பர் சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் மாயமானார்கள்.
 
இதையடுத்து 3 பேரையும் பல்வேறு இடங்களில் தேடினார்கள். மாயமான பிரதீபன், லூர்துவினிசன், சதீஷ்குமார் குறித்து 2 நாட்களாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பெருமாள்புரம் அகதிகள் முகாம் ஊர் தலைவர் பாஸ்கரன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 பேரையும் தேடிவருகிறார்கள்.  
 
மாயமான 3 மாணவர்களும் இலங்கைக்கு தப்பி சென்றார்களா? அல்லது குமரி மாவட்டத்தில் வேறு அகதிகள் முகாமில் உள்ள நண்பர்கள், உறவினர்களை பார்க்க சென்றார்களா? என்ற கோணத்தில் கியூபிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாயமானவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அகதிகள் முகாமில் இருந்து 3 பேர் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - கன்னியாகுமரி

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif