செஞ்சி, ஜன. 30-
செஞ்சி அருகே வி.நயம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது 65) விவசாயி. இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் தர்பூசணி பயிரிட்டுள்ளார். கோதண்ட ராமன் உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தலின் போது இவருக்கும், சிலருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை டீ குடிப்பதற்காக சைக்கிளில் ஆலம்பூண்டிக்கு சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகன் ஸ்ரீரிதரன் தந்தையை தேடி விவசாய நிலத்துக்கு சென்றார். அங்கு கோண்டராமன் சென்ற சைக்கிள் மற்றும் அவர் காலில் அணிந்திருந்த செறுப்பு மட்டும் கிடந்தது.
ஆனால் கோதண்டராமனை காணவில்லை. கிரிதரன் பலமுறை சத்தம் போட்டு அழைத்தும் பலன் இல்லாததால் சந்தேகம் அடைந்த ஸ்ரீரிதரன் வீட்டுக்கு சென்று உறவினர்களை நிலத்துக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு டார்ச் லைட் உதவியுடன் தேடியபோது அங்குள்ள நெற்களத்தில் ரத்தம் தோய்ந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் தொடர்ந்து தேடியபோது முள்புதரில் கோதண்டராமன் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டார்.
அவரது வாய் துணியால் கட்டப்பட்டு இருந்தது.
யாரோ மர்ம ஆசாமிகள் டீ குடித்து விட்டு நிலத்துக்கு திரும்பிய கோதண்டராமனை பின் தொடர்ந்து வந்து கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சத்தம் போடாமல் இருக்க அவரது வாயை துணியால் கட்டி கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து கிரிதரன் சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தேர்தல் முன் விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மோப்ப நாய் சாந்தி மூலம் துப்பு துலக்கினார் கள். அப்போது மோப்பநாய் அதே பகுதியை சேர்ந்த கார் வண்ணன் (26) என்ற வாலி பரை கவ்வி பிடித்தது.
இதையடுத்து போலீசார் கார்வண்ணனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கார்வண் ணன் தற்போது ஊராட்சி மன்ற தலைவர்ராஜேஸ் வரியின் உறவினர் என்பது தெரிய வந்துது.
மேலும் கோவில் விழா நடத்துவது தொடர்பாக கொலை செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோதண்டராமனுக் கும், தற்போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ள ராஜேஸ்வரியின் கணவர் மனோகரனுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது
மேலும் ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது விசாரணை யில் தெரிய வந்தது.
எனவே ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மனோ கரனின் தூண்டுதலின் பேரில் கோதண்டராமன் கொலை செய்யப்பட்டிருக்க லாம் என கருதி மனோ கரையும் அவரது மகன் கோபியையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.