ஈரான் உறவில் மாற்றமில்லை: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி
New Delhi
திங்கட்கிழமை,
ஜனவரி 30,
7:23 PM IST
0
கருத்துக்கள்
சிகாகோ, ஜன.30-
அமெரிக்க நாட்டில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நிறைவு நாளின் போது கூறும்போது, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கொள்கையான அவுட்சோர்சிங் தொடர்பான முடிவு ஏற்று கொள்ள முடியாதது மற்றும் அது அமெரிக்காவிற்கு தோல்வியை தரும் என குறிப்பிட்டார்.
மேலும், ஈரான் நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் முடிவில் மாற்றமில்லை என்றார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு (எப்.டி.ஐ.) குறித்து கூறும் போது, மத்திய அரசில் இடம் பெற்றிருக்கும் கூட்டணி கட்சிகளின் நெருக்குதலால் தற்போது இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம் என்று அவர் கூறினார்.
0
கருத்துக்கள்