Recommendations
Recent Activity
ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் பசுமை வீடுகள்
சென்னை, ஜன. 30-
 
கவர்னர் உரையில் கூறியிருப்பதாவது:-  
 
தமிழ்நாடு கிராமப்புறக் குடியிருப்பு மேம்பாட்டுத்திட்டம் நமது மாநிலத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இத் திட்டம் ஐந்தாண்டுகளில் அனைத்து குக்கிராமங்களிலும் செயல்படுத்தப்படும். இத் திட்டத்தின் மூலம் 2011-2012-ஆம் ஆண்டில் 2,020 கிராம ஊராட்சிகளிலுள்ள 25,335 குக்கிராமங்களுக்கு, சாலை, குடிநீர், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
முதல்-அமைச்சர் ஆணைப்படி ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் சுகாதார வளாகங்களைப் புதுப்பிக்கும் ஒரு பெருந் திட்டம் தொடங்கப்பட்டு, செயல் படுத்தப்பட்டு வருகிறது.  
 
கிராமப்புற வீட்டு வசதியைப் பொறுத்த வரையில், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் தவிர முதல்-அமைச்சரின் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழும் ஒவ்வொரு ஆண்டும் சூரிய மின்சக்தி வசதி கொண்ட 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.
 
இந்த திட்டங்களின் வாயிலாக அனைத்து கிராமப்புற ஏழைகளுக்கும் போதிய அடிப்படை வசதிகளும் பாதுகாப்பான வீட்டு வசதியும் வழங்க இயலும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.