உடற்பயிற்சியில் சில உண்மைகள்
Chennai
திங்கட்கிழமை,
ஜனவரி 30,
10:39 AM IST
0
கருத்துக்கள்
உடற்பயிற்சி குறித்து நாம் வைத்திருக்கும் நம்பிக்கைகளில் எவையெல்லாம் சரியானவை? இதோ, நீங்களே `செக்' செய்துகொள்ளுங்கள்...உடல் நல்ல வடிவம் பெறுவதற்குச் எல்லா பயிற்சியும் சிறந்த வழி தான். ஓட்டமும், மெல்லோட்டமும் (ஜாகிங்) நல்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால் அவை கால் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.
ஒருவர் நீச்சல், நடை, சைக்கிளிங் போன்றவைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவேண்டும். அதன் மூலம், தான் சாப்பிட்டதை விட அதிக கலோரிகளை எரிக்க முடிந்தால் அது சிறந்த உடற்பயிற்சிதான். ஆனால் வலியில்லாத உடற்பயிற்சிகளால் பெரிதாக நன்மை எதுவும் இல்லை என்ற ஒரு எண்ணம் உண்டு. ஆனால் அது தவறானது.
`ஜிம்' பயிற்சியின்போது தசைகளில் வலி எடுக்காவிட்டால் அதனால் பிரயோஜனமில்லை என்று பொதுவாகப் பலரும் கருதுகிறார்கள். தீவிர உடற்பயிற்சியின்போது சிறிது கஷ்டம் ஏற்படலாம். ஆனால் நல்ல உடற்பயிற்சிக்கு வலிதான் அடையாளம் என்பதில்லை. தசை சோர்வு அல்லது தசைநார் கிழிந்திருப்பதையும் வலி சுட்டிக்காட்டலாம்.
0
கருத்துக்கள்