Recommendations
Recent Activity
மன்மோகன்சிங் நேர்மையான மனிதர்: பாகிஸ்தான் பிரதமர் கிலானி பாராட்டு
டாவோஸ், ஜன.29-
 
உலக பொருளாதார அமைப்பின் மாநாடு, சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் கிலானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர், இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மிகவும் நேர்மையான மனிதர் என்று, பாராட்டு தெரிவித்தார். ''நேர்மை மிக்க பிரதமர் மன்மோகன்சிங், காஷ்மீர் உள்ளிட்ட இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் மிகவும் அக்கறையுடன் இருப்பதாக'' அவர் குறிப்பிட்டார்.