திருச்சிற்றம்பலம்,
ஜன. 29-
பேராவூரணி ஒன்றியத்தில் 26-வது குடியரசுதின விழா சிறப்பாக கொண்டாப்பட்டது.
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணத்தில் அமைந்துள்ள பேராவூரணி ஒன்றிய கூட்ட மாளிகை வளாகத்தில் ஒன்றிய குழுத்தலைவர் சாந்தி அசோக்குமார் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
வளாகத்தில் அமைந்துள்ள மகாத்துமா காந்தி சிலைக்கும் அவர் மாலை அணிவித்தார் இந்நிகழ்ச்சியில் ஆணையர் ராஜசேகர், பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர் செல்வேந்திரன், மற்றும் விரிவாக்க அலுவலர்கள் தொழில்நுட்ப அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 26 ஊராட்சிகளில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டங்கள் நடைபெற்றனர்.
முன்னதாக ஊராட்சி மன்ற வளாகங்களில் ஊராட்சி தலைவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்தனர் அதன் விபரம் வருமாறு.
அலிவலம் - சுசிலா, அம்மையாண்டி - சிதம்பரம் இடையாத்தி-சந்தா காலகம் - வைதேகி, களத்தூர் - முருகன், கல்லூரணிக்காடு -சித்ரா பிரபாகரன், குறிச்சி- கலைச்செல்வி ராமமூர்த்தி, மடத்திக்காடு -தமிழ்ரசன், மாவடுகுறிச்சி -பாரி அழகப்பன், ஒட்டங்காடு -சுமதி ராசு, பைங்கால் - பழனி வேல், பழையநகரம் - ஆதி.வெங்கடேசன், பாலத் தளி-கணேசன், பெரிய நாயகிபுரம் - இளங்கோவன் பின்னவாசல்-சுந்தர், பூவாளுர் - தனலெட்சுமி, புனல்வாசல் - செந்தில் குமார், செங்கமங்கலம்- லெட்சுமி, செருவாவிடுதி வடக்கு-கருப்பையன், செருவாவிடுதி தெற்கு பன்னீர்செல்லம், சொர்ணக் காடு-சண்முக நாதன், தென்னங்குடி முருகமூர்த்தி, திருச்சிற்றம் பலம்- மணிமேகலை பிரபாநாதன், துரவிக்கா- பழனிவேல் வலபிரம்மன்காடு -இளங்கோ, வாட்டாத்திக் கோட்டை-மணிமுத்து ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிகொடிகள் ஏற்றி வைத்தனர் கிராம சபா கூட்டங்களை ஒன்றிய குழு தலைவர் அசோக்குமார், ஆணையர் ராஜசேகர் பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர் செல்வேந்தின் மற்றும் அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.