Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
அறுபடைவீடு என்ஜீனியரிங் கல்லூரி கணிப்பொறி தேசிய மாநாடு, ஆதரவற்றோர் மாணவர்சூடு பெண் வார்டன் கைது, இளம்பெண், உத்திரமேரூர் சுந்தரவரத ராஜபெருமாள் கோவில் தேரோட்டம், உத்திரமேரூர் தொகுதி தாலிக்கு தங்கம் அமைச்சர் சின்னையா, உறுப்பினர் சேர்க்கை இளைஞர் காங்கிரஸ், கணவர், கம்யூ. பிரமுகர் மீது தாக்குதல் அ.தி.மு.க. கவுன்சிலர் போலீஸ் நிலையம் முற்றுகை, காஞ்சீபுரம் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு, காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி குழந்தை கடத்தல், காஞ்சீபுரம் காலரா மீன் விற்பனை தடை தண்டோரா, காஞ்சீபுரம் நரிக்குறவர்கள் பசுமை வீடுகள், காஞ்சீபுரம் மயக்கபொடி நகை அபேஷ், காதலனுடன் ஓடிய பள்ளி மாணவி, மதுராந்தகம்
தாம்பரம் அருகே மீன் வியாபாரி கழுத்தை அறுத்து கொலை: உறவினர் ஆத்திரம்
தாம்பரம், ஜன. 29-
 
தாம்பரத்தை அடுத்த சேலையூர் திருவஞ்சேரி முத்து மாரியம்மன்  கோவில் தெருவைச் சேர்ந்தவர் பச்ச முத்து (40). மீன் வியாபாரி. இவருக்கு  ராஜம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ராஜம்மாளின்  தம்பி ராமச்சந்திரன்.  இவர் அதே பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தார். ராமச்சந்திரனுக்கும்,   அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும்.
 
பின்னர் பச்சமுத்து சென்று கணவன்-மனைவி இடையே தகராறை தீர்த்து வைப்பார். இந்த நிலையில் நேற்று  ராமச்சந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
 
இதைக் கேள்விப்பட்டு ராமச்சந்திரன் மனைவியின் உறவினர் சக்திவேல் அங்கு வந்தார். அவர்  ராமச்சந்திரனை அடித்து உதைத்தார். இந்த விஷயம் பச்சமுத்துவுக்கு தெரிய  வந்தது. அவர் சக்திவேலை சந்தித்து கண்டித்தார். 
 
ராமச்சந்திரனை அடித்தால் நடப்பதே வேறு என்று மிரட்டினார். இதனால் சக்திவேல் ஆத்திரம் அடைந்தார். அவர் பச்சமுத்துவிடம் நாம் சமரசமாக செல்லலாம் என்று கூறி மது குடிக்க  அழைத்தார். பின்னர் இருவரும் ஆட்டோவில் ஏறி மது குடிக்க சென்றனர்.
 
சிட்லபாக்கம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சக்திவேல் திடீரென பச்சமுத்துவை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் பிணத்தை அங்கேயே வீசி விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
 
இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை தேடி வருகிறார்கள்.