Recommendations
Recent Activity
இலுப்பூர் மதர்தெரசா கல்லூரியில் 370 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா
விராலிமலை,ஜன.29-

இலுப்பூர் மதர்தெரசா கல்வியியல் கல்லூரி நான்காவது பட்டமளிப்பு விழா 28.01.2012 சனிக்கிழமை கல்வியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு தாளளார் உதயக்குமார் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் பாண்டியன் வரவேற்றார். விழாவில் கோயம்புத்தூர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர். கே.கருணாகரன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளம்பட்டதாரி ஆசிரியர்களுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழாப் பேருரையாற்றினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:-

தற்பொழுது நமது நாட்டின் எழுத்தறிவு பெற்றவர்: 74.07 கல்வி பெற்ற சமூகமே வறுமையை எதிர்த்து வாழமுடியும் கல்விக்காக மக்கள் செலவிடும் சக்தி தற்போது உயர்ந்துள்ளது. செய்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆசிரியர் கல்வியிலும் புதிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது. மாறிவரும் சமூகத் தேவைகளை எதிர்கொள்ளும் தகுதியும் திறன்களும் மிக்க ஆசிரியர்களை கல்வியியல் கல்லூரிகள் உருவாக்க வேண்டும். எதிர்கால குடிமக்களை உருவாக்கும் ஆசிரியர்கள் நற்பண்புகளை மாணவரிடம் வளர்க்க வேண்டும் எனக்குறிப்பிட்டார்.

மதர்தெரசா கல்வியியல் கல்லூரி (இருபாலர்) தெரசா கல்வியியல் கல்லூரி மற்றும் மதர்தெரசா கல்வியியல் கல்லூரி (மகளிர்) ஆகிய நிறுவனங்களில் 2009- 10-ல் இளங்களை கல்வியியல் மற்றும் முதுகலை கல்வியியல் பயின்று பட்டம் பெற்ற 370 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விராலிமலை டாக்டர்.சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கோவை அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழக கல்வி வளாக முதன்மையர் டீன் சரவணக்குமார், சாகித்ய அகாடமிக் குழு உறுப்பினர் தங்கம் மூர்த்தி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். மதர்தெரசா கல்வி நிநுவனங்களின் தாளாளர் இராசி.உதயக்குமார், நன்றி கூறினார்.

கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் பாண்டியன் பட்டமளிப்பு உறுதிமொழி வாசித்தார். விரிவுரைளாயர் சோமசுந்தரம் தொகுத்து வழங்கினார். ஒய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மரியபிரான்சீஸ், நல்லக்குமார், இலுப்பூர் நகர அதிமுக செயலாளர் கோபால், ஒன்றிய கவுன்சிலர் செல்லத்துரை, கிராமநிர்வாக அலுவலர் பழனிவேல், கல்வி அறக்கட்டளை உறுப்பினர் குபேந்திரன் மற்றும் கல்விநிறுவன முதல்வர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.