பழனி, ஜன.29-
பழனி ஸ்ரீசுப்ரமண்யா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் சார்பாகவும் வாழும் கலைபயிற்சி இயக்கத்தின் சார்பாகவும் கல்லூரியில் உள்ள விவேகானந்தர் கலையரங்கத்தில் வாழும் கலைப்பயிற்சி, மரம் நடும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கல்லூரியின் துணைத்தலைவர் பாபுராஜ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
முன்னதாக கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்றார். கல்லூரியின் அறங்காவலர் சந்திரன், ஆலோசகர் இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாழும் கலைபயிற்சி விழாவில் சிறப்பு விருந்தின ராக பெங்களூர் வாழும் கலைப்பயிற்சி இயக்கத்தின் முதன்மை குரு ஞானதேவ்ஜி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பல பயனுள்ள கருத்துக்களையும், மர வளர்ப்பதன் அவசி யத்தையும், மரம் வளப்பதன் மூலமாக மனித குலத்திற்கு தேவைப்படும் பயன்களை படக்காட்சியின் மூலமாக எடுத்து கூறினார்.
மாணவ, மாணவிகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதைபோல் நாம் வாழும் சமுதாயத்திற்கும் சேவை செய்ய வேண்டு மெனவும், மாணவ, மாணவிகள் தினந்தோறும் இருபது நிமிடங்களாவது மரம் வளர்க்க நேரம் ஒதுக்க வேண்டுமென்றும், முன்னேறிய நாடுகள் இயற்கை சூழலுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப்போல் நாமும், நம்முடைய சமுதாயமும் இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டுமெனவும் எடுத்து கூறினார்.
மேலும் மாணவ, மாணவி களிடையே நாம் வாழும் உலகத்தில் நிலம், நீர் காற்று ஆகியவை மாசுபடுவதை தடுக்க நாம் என்ன நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை விழிப் புணர்வு கேள்வி பதில் மூலமாகவும் ஒலி-ஒளி காட்சிகள் மூலமாகவும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்து கூறினார். முடிவில் கல்லூரியின் ஆலோசகர் இம்மானுவேல் நன்றி கூறினார்.