ஜப்பானில் இன்று நிலநடுக்கம்
Tokyo
சனிக்கிழமை,
ஜனவரி 28,
4:30 PM IST
0
கருத்துக்கள்
டோக்கியோ, ஜன. 28-
ஆசிய கண்டத்தில் உள்ள ஜப்பான் அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் நாடாகும். ஜப்பானில் மத்திய பகுதியில் இருக்கும் யாமனஹி என்ற இடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவாகி இருந்தது. இந்த நில நடுக்கத்தால் பாதிப்போ அல்லது காயம் ஏற்பட்டதோ என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மார்ச் 11-ந் தேதி ஜப்பானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் (ரிக்டர் அளவு கோல் 9) 20 ஆயிரம் பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0
கருத்துக்கள்