Recommendations
Recent Activity
சென்னையில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜன. 28-
 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.   கல்வித்துறையில் தனியார் பங்கேற்பை உருவாக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவை கைவிட வேண்டும், 6-வது ஊதிய முரண்பாடுகளை முழுமையாக மாநில அரசு களைய வேண்டும், பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
மாநில தலைவர் கோ. காமராஜ் தலைமை தாங்கினார். அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் சிறப்புரை ஆற்றினார். மாநில பொருளாளர் தமிழ்செல்வன், பொதுச் செயலாளர் ரெங்கராஜன், நிர்வாகிகள் சுப்பாராசு, அன்பழகன், மூர்த்தி, இளங்கோ, பெரியசாமி உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள்.  
 
ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 10 ஆயிரம் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேலான ஆசிரியைகளும் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். ஆசிரியர்களின் போராட்டத்தால் பெரியார் ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து பாதித்தது. அரசு ஆஸ்பத்திரி முன்பு நெரிசல் ஏற்பட்டது.