பேராவூரணியில் மாட்டு வண்டி குதிரை வண்டி பந்தயம் || In peravurani bullock cart Horse racing car
Logo
சென்னை 28-04-2015 (செவ்வாய்க்கிழமை)
  • நேபாள பூகம்பத்தில் எந்த சேதமும் அடையாத பசுபதிநாதர் கோவில்
  • போலி பாஸ்போர்ட்டில் சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியா வந்தவர் கைது
  • மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல்: கொல்கத்தா மேயர் தேர்தலில் திரிணாமூல் வேட்பாளர் சோவன் சட்டர்ஜி வெற்றி
  • உரிமை மீறல் நோட்டீசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஷோபா டே வழக்கு
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வு
பேராவூரணியில் மாட்டு வண்டி-குதிரை வண்டி பந்தயம்
பேராவூரணியில் மாட்டு வண்டி-குதிரை வண்டி பந்தயம்
திருச்சிற்றம்பலம், ஜன. 27-
 
பேராவூரணியில் மாட்டு வண்டி-குதிரை வண்டி பந்தயம் போட்டி நடந்தது.   தஞ்சை மாவட்டம் பேராவூரணி பிள்ளையார் குரூப்ஸ் நண்பர்கள் சார்பில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி, குதிரை வண்டி போட்டி நடந்தது. மாட்டு வண்டி பந்தயத்தில் பெரியமாடு, கரிச்சான்மாடு, நடுமாடு, பூஞ்சிட்டு மாடு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.
 
 குதிரை வண்டி பந்தயத்தில் கரிச்சான் குதிரை, புதுப்பூட்டு, நடுக்குதிரை ஆகிய பிரிவுகளில் போட்டி நடந்தது. தஞ்சை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அமுதா தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை நகரசபை தலைவர் ஜவகர் பாபு, மருது பேரவை மாநில துணை தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
 
வெற்றி பெற்ற அணிக்கு சிங்கவனம் பரிசுகள் வழங்கினார். சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழுத்தலைவர் சுந்தரராஜன், பேராவூரணி சாந்தி அசோக்குமார், பேராவூரணி பேரூராட்சி தலைவர் அசோக்குமார், கார்த்திக்கேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தஞ்சாவூர்

amarprakash160-600.gif