சேலம் மாவட்டத்தில் கடும் உறைபனி
Chennai
வெள்ளிக்கிழமை,
ஜனவரி 27,
1:00 PM IST
0
கருத்துக்கள்
சேலம், ஜன. 27-
சேலம் மாவட்டத்தில் நிலவிவரும் கடும் உறைபனியால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சேலத்தில் கடந்த சில நாட்களாகவே பனிப்பொழிவு அதிகளவில் நிலவி வருகிறது. குறிப்பாக மதியம் 3 மணிக்கு மேல் குளிர் வீசுகிறது.
இதனால் மாலையில் சீக்கிரமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கொள்கின்றனர். பின்னர் இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகளவில் நிலவிவருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக பனியின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர்.
இன்று காலை ஏற்காட்டில் கடுமையான உறைபனி நிலவியது. இதே போல் சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உறைபனி நிலவியது. இதனால் பொதுமக்கள் தோல்களில் பனிவெடிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டனர். குழந்தைகள், முதியோரும் இந்த பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். குளிரின் தாக்கத்தில் இருந்து விடபட பொது மக்கள் தீ மூட்டி குளிர்காய்ந்தனர்.
ஏற்காட்டில் இன்று காலை நிலவிய உறைபனியின் காரணமாக காலை 8 மணி வரை வாகனங்கள் முகப்பு விளக்கை போட்டு கொண்டே வந்து சென்றது. வாகனங்கள் அனைத்தும் மெதுவாக இயக்கப்பட்டது. கடும் பனிப்பொழிவின் காரணமாக நகரில் எங்கு பார்த்தாலும் மக்கள் சுவட்டர், குல்லா மற்றும் உல்லன் ஆடைகளை அணிந்து கொண்டு வந்து சென்றனர்.
0
கருத்துக்கள்