Recommendations
Recent Activity
பட்ஜெட்டில் ரூ.28 லட்சம் கோடி ஒதுக்கீடு: அமெரிக்க ராணுவத்தில் 1 லட்சம் வீரர்கள் குறைப்பு
வாஷிங்டன், ஜன. 27-
அமெரிக்க ராணுவத்தில் 1 லட்சம் வீரர்கள் குறைக்கப்பட உள்ளனர்.   அமெரிக்காவில் அடுத்த 5 ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ராணுவத்துக்கு ரூ.28 லட்சத்து 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இன்னும் 5 ஆண்டுகளில் 1 லட்சம் ராணுவ வீரர்கள் ஆட் குறைப்பு செய்யப்பட உள்ளனர். அவர்களில் ராணுவம் மற்றும் கப்பற்படை வீரர்களும் அடங்குவர். ஏனெனில், ஈராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் தற்போது அங்கிருந்து வாபஸ் பெற்றதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. பழைய விமானம் தாங்கி போர் கப்பல்கள் மற்றும் கடல் எல்லை பாதுகாப்பு படையினர் பழைய கப்பல்களுக்கும் ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
 இந்த தகவலை, அமெரிக்க ராணுவ மந்திரி லியான் பனேட்டா தெரிவித்துள்ளார். படையில் இருந்து ராணுவ வீரர்கள் குறைக்கப்பட்டாலும், சிறப்பு பாதுகாப்பு படையில் வீரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். எதிரிகள் தாக்குதலில் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும்” என்றார்.