Recommendations
Recent Activity
சீனாவில் பெண் பாதுகாவலர்களுக்கு நீச்சல் உடையில் பயிற்சி
பெய்ஜிங், ஜன. 27-
 
சீனாவில் உள்ள தியாஞ்சியோ சிறப்பு பாதுகாப்பு அமைப்பு என்ற ஒரு தனியார் நிறுவனம் பெண் பாதுகாவலர்களை நியமித்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழகத்தில் பயின்ற பட்டதாரி மாணவிகள். இங்கு பணிபுரியும் பெண்களுக்கு பலவிதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
 
தற்போது, இந்த பெண்களுக்கு நீச்சல் உடையில் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.  கிளுகிளுப்பான நீச்சல் உடையில் அவர்கள் எடுக்கும் பயிற்சி போட்டோக்கள் இண்டர்நெட்டில் உலா வருகின்றன.
 
இது சீனாவில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இது சீனாவின் பாரம்பரிய கலாச்சாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பலர் டுவிட்டரில் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த நிறுவனம் இதை கண்டு கொள்ளவில்லை.
 
அந்த பெண்களுக்கு இஸ்ரேலில் உள்ள சர்வதேச பாதுகாப்பு மையத்தில் மேலும் பயிற்சி அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.