பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
Karur
வியாழக்கிழமை,
ஜனவரி 26,
5:40 PM IST
0
கருத்துக்கள்
கரூர்,ஜன.26-
கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் சிவசாமி, செயலாளர் கோபிகாளிதாஸ், நகர தலைவர் சிவம் சக்திவேல், மகளிர் அணி கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி சந்திரசேகர், ரத்தினவேல், சண்முகசுந்தரம், மோகன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0
கருத்துக்கள்