Recommendations
Recent Activity
பத்திரம் இருக்கு நிலத்தை காணோம்: விவசாயி நூதன புகார்
பொன்னேரி, ஜன. 26-
 
பொன்னேரி அருகே உள்ள ஊரணம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் விவசாயி. இவரது மனைவி ஆனந்தி.   சிறுளப்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய அண்ணா மலைச்சேரி கிராமத்தில் சென்னை கடன் வசூல் தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் (சர்வே எண். 39.1) ஒரு ஏக்கர் 46 சென்ட் நிலத்தை சென்னையை சேர்ந்த அமுதா என்பவர் வாங்கி இருந்தார்.
 
அதனை பொது அதிகாரப்பத்திரத்தின் மூலம் 2007-ம் ஆண்டு ஆனந்தி விலைக்கு வாங்கி பத்திர பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் அந்த நிலத்தை நில அளவையாளர் மூலம் அளந்து பார்த்த போது இந்த சொத்து வில்லங்க சான்றிதழில் பதிவாகி உள்ளது தெரிந்தது.
 
ஆனால் தரிசு நிலம் மட்டும் உள்ளதாகவும், தீர்ப்பாயம் வழங்கிய நிலம் இல்லை எனவும் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்துள்ள சான்றிதழில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் இது குறித்து பொன்னேரி கோட்டாட்சியரிடம் புகார் செய்தார். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.