மோசமான ஆட்டம்: இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை -இஷாந்த் சர்மா
Melbourne
வியாழக்கிழமை,
ஜனவரி 26,
1:09 PM IST
1
கருத்துக்கள்
அடிலெய்ட், ஜன. 26-
ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. தான் விளையாடிய 3 டெஸ்டிலும் இந்திய அணி தோற்றது. தற்போது நடைபெற்று வரும் 4-வது டெஸ்டிலும் இந்திய அணி தடுமாறி வருகிறது.
இந்த டெஸ்டிலும் இந்திய பந்துவீச்சு எடுபடவில்லை. ஆஸ்திரேலியா 604 ரன்கள் குவித்தது. அதுவும் 7 விக்கெட்டை மட்டுமே எடுக்க முடிந்தது. இஷாந்த் சர்மா 30 ஓவர் வீசி 100 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட் கூட கைப்பற்ற இயலவில்லை.
இந்த தொடரில் அவரது பந்துவீச்சு மிகவும் மோசமாகவே உள்ளது. 4 டெஸ்டில் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். இந்த மோசமான நிலையை வைத்துக்கொண்டு அவர் அதிர்ஷ்டம் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பெர்த் டெஸ்டில் நாங்கள் சிறப்பாகவே பந்து வீசினோம். ஆனால் விக்கெட் விழவில்லை. அடிலெய்ட் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது என்றாலும் நாங்கள் நேர்த்தியாகவே பந்து வீசினோம். அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல முடியும்.
முழுவதுமாக அதிர்ஷ்டத்தை சொல்லவில்லை. அதிர்ஷ்டம் எங்களுக்கு மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வறு அவர் கூறினார்.
1
கருத்துக்கள்