Recommendations
Recent Activity
டுவிட்டரில் நடிகை பூனம் பாண்டே ஆபாச படம்
புதுடெல்லி, ஜன. 26-
 
மும்பை மாடல் அழகியும், நடிகையுமான பூனம் பாண்டே புதுமைகளை செய்வதில் மிகவும் ஆர்வமானவர். அதன் மூலம் மற்றவர்களின் புருவங்களை உயரச்செய்வார்.   கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக அதிர்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
 
அதாவது, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றால், ஆடைகளை களைந்து வீதியில் நிர்வாணமாக ஓடுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
 
தோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றது. ஆனால் பூனம் பாண்டே தான் அளித்தவாக்குறுதியை நிறை வேற்றவில்லை. தற்போது, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் இந்த முறை இந்திய அணியின் பக்கம் கவனத்தை செலுத்த பூனம் பாண்டேவுக்கு நேரமில்லை போலும்.
 
டி.வி.க்கள் நடத்தும் தத்ரூபமான ஷோக்களில் நாயகியான இவர், இப்போது டுவிட்டரில் தலைகாட்டி உள்ளார்.   அவர் தனது டுவிட்டரில் வெள்ளை நிற பிகினி உடையில் மிகவும் கவர்ச்சியாக காட்சி அளிக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இப்படி ஆபாசமாக காட்சி அளிப்பதில், தனக்கு கவலையோ, தயக்கமோ கொஞ்சமும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் இந்திய பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் நுழைந்திருப்பதை நான் கேள்விப்பட்டேன். பூனம் பாண்டே என்ற நானும் டுவிட்டரில் உள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.