Recommendations
Recent Activity
உத்தரபிரதேசத்தில் காங்கிரசும்-மாயாவதியும் நிழல் யுத்தம் நடத்துகின்றனர்: உமாபாரதி தாக்கு
லக்னோ, ஜன. 26-
 
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், சர்க்காரி  தொகுதியில் பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான உமாபாரதி போட்டியிடுகிறார். இவர் மத்திய பிரதேச மாநி லத்தைச் சேர்ந்தவர். சர்க்காரி சட்டசபை தொகுதி இம்மாநில எல்லையில் அமைந்துள்ளது.
 
உமாபாரதி பந்தல் காண்ட் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-  
 
பந்தல் காண்ட் பகுதி ஏழ்மை, வறட்சி, பட்டினி நிறைந்த மண்டலமாக உள்ளது. இங்குள்ள மக்களின் கஷ்ட நிலையை எண்ணி வறுத்தப்பட வேண்டுமே தவிர, கேலி செய்யக் கூடாது. ராகுல் காந்தி அதை தான் செய்து வருகிறார்.
 
ஏழ்மை நிலையை கேலி செய்வதை ராகுல்காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும்.   காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் என்னைப்பற்றி விமர்சனம்செய்துள்ளார். பெரிய சக்தி போல் பேசி வருகிறார். மத்திய பிரதேசத்தில் என்னிடம் தோற்றவர் தான் திக் விஜய் சிங்.
 
சர்க்காரி தொகுதி மக்கள் என்னை ஒரு எம்.எல்.ஏ.வாக மட்டுமல்லாமல் ஒரு பாதுகாவலனாகவும் தேர்ந்து எடுக்க உள்ளனர்.  
 
உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரசும் நிழல் யுத்தம் நடத்து கின்றனர். மத்திய அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கிறது. ஆனால், மாநிலத்தில் ஊழல் ஆட்சி நடப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிக்கின்றனர்.
 
நிதி யானையின் வாய்க்கு (மாயாவதி கட்சி சின்னம்) போகிறது என்று தெரிந்தே தான் மத்திய அரசு தொடர்ந்து நிதி ஒதுக்கியது.
 
இவ்வாறு உமாபாரதி கூறினார்.