சாய்னா பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு
Hyderabad
புதன்கிழமை,
ஜனவரி 25,
2:02 PM IST
0
கருத்துக்கள்
ஐதராபாத், ஜன. 25-
இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனை சாய்னாநேவால். தற்போது உலக தரவரிசையில் அவர் 4-வது இடத்தில் உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக சாய்னா சிறப்பாக விளையாடி வருகிறார். லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக தேசிய பயிற்சியாளரும், முன்னாள் பிரபல வீரருமான கோபிசந்த் கூறியுள்ளார்.
சூப்பர் சீரியஸ், மலேசிய ஓபனில் சாய்னா சிறப்பாக விளையாடினார். இது ஒலிம்பிக் போட்டிக்கு இணையானது. இதனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லக்கூடிய திறமை அவரிடம் உள்ளது. பதக்கம் வெல்ல அவருக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றார்.
0
கருத்துக்கள்