Recommendations
Recent Activity
நாகார்ஜுனா ஜோடியாக மீண்டும் சினிமா பிரவேசம்: நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்தது?
சென்னை, ஜன. 25-
 
பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள நயன்தாரா சினிமாவை விட்டு விலகினார். கடந்த வருடம் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்த போது முதலில் மறுத்தார். பிறகு சீதை வேடம் என்றதால் பிரபுதேவாவிடம் சம்மதம் பெற்று நடித்து கொடுத்தார். அப்படப்பிடிப்பு முடிந்த கடைசி நாளில் எல்லோரிடமும் கண்ணீர் விட்டு அழுதபடி விடை பெற்றார்.
 
தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று நல விரும்பிகள் வற்புறுத்தியபோது சிரிப்பையே பதிலாக அளித்தார். அதன் பிறகு ஒரு கோடி சம்பளம் பேசி பல படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு அழைப்பு வந்தது. எதிலும் நடிக்கவில்லை.
 
சினிமாவை விட்டு விலகி விட்டதாக சொல்லி மறுத்தார். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது திடீரென்று மீண்டும் சினிமாவில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்தது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
 
தெலுங்கு படமொன்றில் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இருவரும் பாஸ் ஐ லவ்யூ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். சிவபிரசாத் ரெட்டி தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். தசரத் இயக்குகிறார்.
 
காதல் கதையாக தயாராகிறது. மே மாதம் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். பிரபுதேவாவுடனான காதல் முறிந்து விட்டதால் நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்ற செய்தி பரவியுள்ளது.
 
பிரபுதேவாவின் நடவடிக்கைகளில் நம்பகத்தன்மை குறைந்து விட்டதென நயன்தாரா கருதுவதாக கூறப்படுகிறது. விவகாரத்துக்கு பிறகும் முதல் மனைவி குடும்பத்துடன் பிரபுதேவா தொடர்பு வைத்துள்ளது அவருக்கு பிடிக்கவில்லை. அத்துடன் ஹன்சிகா மோட்வானியுடன் பிரபுதேவா நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசு வெளியாகியுள்ளது.
 
ஹன்சிகாவை வைத்து எங்கேயும் காதல் படத்தை இயக்கியபோது இருவருக்கும் நட்பு ஏற்பட்டதாகவும் அது காதலாக மலர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால்தான் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள பிரபுதேவா தயங்குகிறாராம். மீண்டும் சினிமாவில் நடிக்கவே இதுவே காரணம் என கூறப்படுகிறது.