Recommendations
Recent Activity
முதல்-மந்திரி பதவி: உமாபாரதிக்கு பா.ஜ.க. தலைவர்கள் எதிர்ப்பு
லக்னோ, ஜன. 25-
 
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, பாரதீய ஜனதா, சமாஜ்வாடி ஆகிய கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா சார்பில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த உமாபாரதி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபை தேர்தல் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் உமாபாரதி முதல்வராக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாயின.
 
இந்த நிலையில் பா.ஜனதா துணைத் தலைவர் கல்ராஜ் மிஸ்ரா லக்னோவில் நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி, உத்தரபிரதேச தேர்தல் பொறுப்பாளர்களாக உமாபாரதி, ராஜ்நாத்சிங், சூர்யபிரதாப் சாவரி ஆகியோரை நியமித்துள்ளார். இதில் எனக்கும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
உமாபாரதி வேறு மாநிலத்தை சேர்ந்தவர். இதற்கு முன்பு மத்திய மந்திரியாக இருந்தவர். அவரை ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் தலைவராக கட்டுப்படுத்தி வைக்க முடியாது. எனவே அவர் உத்தரபிரதேச முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்பே இல்லை. பா.ஜனதா மேலிடம்தான் முதல்வர் யார்? என்பதை முடிவு செய்யும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.